ஃபேஸ்புக் மூலம் 50 குடும்ப பெண்களை குறி வைத்து வேட்டையாடிய காமக்கொடூரன் கைது!

பொள்ளாச்சியில் நடந்த கொடூர சம்பவம் போல் கேரளாவிலும் அரங்கேறியுள்ளது.கேரள மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள அரீபறம்பு பகுதியை சேர்ந்தவர் தான் பிரதீஷ்குமார். இவர் மீது ஒரு பெண் பாலியல் புகார் ஒன்றை அளித்தார். அந்த பெண் கூறிய புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் பிரதீஷ்குமாரை கைது செய்தனர்.

 

பிரதீஷ்குமார் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அவர் குடும்ப தலைவிகளை குறி வைத்து கோர செயல்களை நிகழ்த்தியுள்ளார்.
முதலில் குடும்ப பெண்களிடம் நட்பாக பழகி பின் சாட்டிங் மூலம் பேசத் தொடங்குவார்.பின்னர் அவர்களைதனது வழிக்கு கொண்டு வந்துமொபைல் நம்பரயும் வாங்கிவிடுவார்.

 

அவருடைய பாலியல் வலையில் விழாத பெண்களை நம்ப வைக்க பல மோசடி வேலைகளை பிரதீஷ்குமார் தயங்காமல் செய்துள்ளார்.
அவருடன் பேசும் பெண்களின் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை சாட்டிங் மூலம் அறிந்து கொண்டு சிறிய பிரச்சனையை பெரியதாக மாற்றுகிறான்.

 

அது என்னவென்றால் ஃபேஸ் புக்கில் பெண்கள் பெயரில் ஒரு போலியான கணக்கை தொடங்குகிறான். அதில் அவன் பழகும் பெண்களின் கணவர்களை அந்த போலி கணக்கின் மூலம் தொடர்புகொண்டு சாட் செய்கிறான். கொஞ்சம் கிழுகிழுப்பாக பேசி அவர்களின் கணவர்களை ஏமாற்றியுள்ளான். பின்னர்,அந்த சாட்டிங்கை ஸ்கிரீன் ஷாட் செய்து சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அனுப்பி உங்களின் கணவர் மற்ற பெண்களுடன் எவ்வாறு ஆபாசமாக பேசுகிறார் என்று பாருங்கள் என்று கூறி பெண்களை அவன் வழிக்கு கொண்டு வந்து விடுகிறான்.

பெண்களின் நம்பிக்கையை பெற்ற பிறகு அவர்களிடம் வீடியோ கால் மூலம் பேசி தனது அடுத்த கட்ட வேலையாக தொடங்குகிறான். வீடியோ கால் பேசும் போது அதனை ரெகார்ட் செய்து ,அந்த பெண்ணின் புகைப்படத்தை ஆபாச படத்துடன் வைத்து உண்மையான புகைப்படம் போலவே எடிட் செய்கின்றான்.

 

அந்த புகைப்படத்தை அனுப்பி தனது விருப்பதிற்கு இணையுமாறு கூறுகிறான். இதனை பெண்கள் மறுத்தால் படத்தை இணையத்தில் வெளியிடுவேன் எனவும், கணவருக்கு அனுப்புவேன் என கூறி மிரட்டுகிறான். இதனால் பயத்தின் காரணமாக பெண்கள் பிரதீஷ்குமாரின் விருப்பத்திற்க்கு இணங்கிபோகின்றனர்.
இவ்வாறு 50 க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளான்.

 

தற்போது பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் பிரதீஷ்குமாரை போலீசார் கைது செய்து உள்ளனர். அவரின் மொபைல், லேப்டாப் ஆகியவற்றை போலீசார் சோதனை செய்ததில் மார்பிங் செய்யபட்ட புகைப்படம் சிக்கியுள்ளது.போலீசார் அதனை பறிமுதல் செய்துள்ளனர்.

 

இந்த சம்பவம் அப்பகுதியில் அம்மாநிலத்தாரினிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply