மணல் திருட்டை தடுக்கச் சென்றவர் அடித்துக் படுகொலை!

இராமநாதபுரம் மாவட்டம் இளமனூர் பகுதியை சேர்ந்த மோகன்-45 என்பவர் அப்பகுதியில் நடக்கும் மணல் திருட்டை தடுக்க சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் இந்நிலையில் அங்கு மணல் திருட்டில் ஈடுபட்டு கொண்டிருந்த நபர்கள் இவருடன் மோதல் முற்றிய நிலையில் அவரை அடித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக மோகன் அப்பகுதியில் மற்ற நண்பர்கள் உதவியுடன் அப்பகுதிக்கு சென்றுள்ளார் மணல் திருட்டை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.

இந்நிலையில், மணல் திருட்டில் ஈடுபட்டு வந்த பலர் ஒன்று கூடி மோகன் என்பவரை அடித்துக்கொலை செய்து அவர்களே அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்துள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட லட்சுமணன், செல்வம், முருகேசன், சாத்தையா, ஆகியோர் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் மோகன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல மணி நேரம் சாலை மறியல் நீடித்த நிலையில், காவல்துறை பேச்சு வார்த்தை நடத்தி உரிய குற்றவாளியை கைது செய்யப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து கலைந்து சென்றனர். மணல் திருட்டில் ஈடுபட்டவர் அதிமுக கட்சியின் முக்கிய பிரமுகர் என்று கூறப்படுகிறது இருப்பினும் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.


Leave a Reply