கணவர் இறந்த 2 மணி நேரத்தில் மனைவியும் இறந்த சோகம்…

கோயம்புத்தூர் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் ராஜூ வயது 87,இவரது மனைவி துளசியம்மாள் வயது 83. இவர்களுக்கு திருமணம் ஆகி 67 ஆண்டுகளாகிறது.இவர்களுக்கு 4 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

 

இவர்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்து தனித்தனியாக வாழ்ந்துவந்தனர். அப்போது ராஜும் அவரது மனைவி துளசியம்மாளும் தனியாக இருந்து வந்துள்ளனர்.வயது முதிர்ச்சி அடைந்ததன் காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளனர்.

 

இவர்களின் செலவுக்கான பணத்தை மகன்கள் வழங்கி வந்துள்ளனர்.இதனால் தனி வீட்டில் இருவரும் சமைத்து சாப்பிட்டு வந்துள்ளனர்.அப்போது இரவு 10 மணியளவில் ராஜூவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த துளசியம்மாள் முதலுதவி அளிக்க முயன்றுள்ளார். ஆனால் ராஜு மரணம் அடைந்தார்.தகவல் அறிந்து வந்த உறவினர்கள் வீட்டிற்கு வந்தனர். அன்னூரின் அருகே உள்ள புளியம்பட்டியில் அமைந்துள்ள மின் மயானத்தில் ராஜூவின் உடல் தகனம் செய்யப்பட முடிவு செய்யபட்டது.

 

அதற்காக வீட்டின் பீரோவிலிருந்த கணவரின் ஆதார் அட்டை,வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை துளசியம்மாள் 12 மணியளவில் எடுத்து கொண்டிருந்தார்.அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு துளசியம்மாளும் இறந்தார்.

 

67 ஆண்டு ஒன்றாக வாழ்ந்து, தன்னுடய கணவர் இறந்த சோகத்தை தாங்க முடியாமல் 2 மணி நேரத்தில் மனைவியும் இறந்தது அந்த பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply