தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் நன்னிலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்
அப்போது அவர் கூறியதாவது:-
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின்போது ஊர், ஊராக சென்று ராகுல்காந்தி பிரதமர் ஆவார், உடனடியாக அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்படும் என்றார்.
இந்த இரண்டிலும் அவர் தோற்று விட்டார். அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற முடியாது. அவர் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்தார். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி தொடர்கிறது.
இந்தியாவில் மோடி தலைமையிலான ஆட்சி தொடர்கிறது. எடப்பாடி பழனிசாமி வலியான முதல்-அமைச்சர் என்பதை விரைவில் நிருபிப்போம்.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடும் கிடையாது. இரண்டு பேரும் இணைந்து செயல்படுகின்றனர் என்றார்.