வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்த ஓ.பி.எஸ் மருமகள்.!

தேனி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார். இன்று முதல் தனது பிரசாரத்தை துவங்கிய ரவீந்திரநாத்குமார், மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் பிரசாரம் செய்து வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அதே வேளையில், அவரது மனைவியும், தாயும் அவருக்காக தேனியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
தேனி மாவட்டம் வடபுதுப்பட்டி கிராமத்திற்குச் சென்ற அ.தி.மு.க மகளிர் அணியினர் ரவீந்திரநாத்குமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். அவர்களுடன் வந்த, ரவீந்திரநாத்குமாரின் மனைவி ஆனந்தி, தாய் விஜயலெட்சுமி ஆகியோர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். விஜயலெட்சுமி வடபுதுபட்டி கோவில் சாமிகும்பிட்டுவிட்டு சிறிது நேரம் மக்களைச்சந்தித்துப் பேசினார் ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மருமகள் ஐஸ்வர்யா, ஆனந்தியுடன் இணைந்து வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடன், பெரியகுளம் (தனி) தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் மயில்வேலின் மனைவி உடன் இருந்தார். பெரியகுளம் அ.தி.மு.க ஒன்றியச்செயலாளர் அன்னபிரகாஷ் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர். சுமார், 200-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள், வடபுதுப்பட்டி கிராம பெண்களுடன் தனது கணவனுக்காக மனைவி வாக்கு கேட்டது தேனி அரசியல் களத்தின் கவனம் பெற்றது என்றே சொல்லலாம்


Leave a Reply