--- --:--:-- --

காதலனால் கடத்தப்பட்ட 17 வயது சிறுமி எலி மருந்து சாப்பிட்டு உயிரிழப்பு..!

5

துரையில் காதலனால் கடத்தப்பட்ட 17 வயது சிறுமி எலி மருந்து சாப்பிட்டு அழகிய உயிரிழந்ததாக மாவட்ட எஸ்பி விளக்கம் அளித்துள்ளார். மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பை பட்டியை சேர்ந்த நாகூர் ஹனீபா என்ற இளைஞர்.

 

பிப்ரவரி 14ஆம் தேதி தனது காதலியான 17 வயது சிறுமியை கடத்தி சென்றார். அவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் கடந்த 3ஆம் தேதி அவரது வீட்டில் நாகூர் ஹனிபா விட்டுச் சென்றார். சிறுமிக்கு உடல்நலம் குன்றியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

 

இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்பது மருத்துவ அறிக்கையில் தெளிவாக உள்ளது என்றார்.

 

போலீசார் தேடுவதை அறிந்து சிறுமி எலிமருந்து உட்கொண்டதால் உடல் உறுப்பு பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவித்த அவர் வழக்கு தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

Right Menu Icon