ஏடிஎம் கார்டை திருடி ரூ.24 ஆயிரம் ரூபாயை அபகரித்த பெண்!
புதுச்சேரியில் பெண் ஒருவரிடம் இருந்து ஏடிஎம் கார்டை திருடி 24 ஆயிரம் ரூபாயாக இருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியை சேர்ந்த மீரா என்பவர் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருடன் பயணம் செய்த மற்றொரு பெண் மீராவிடம் பர்சை லாவகமாக திருடிக் கொண்டு சென்றுள்ளார்.
பஸ்ஸிலிருந்து ஏடிஎம் கார்டும் அதற்கான கடவு எண்ணும் இருப்பதாக கூறப்படுகிறது. அதை பயன்படுத்தி வங்கி கணக்கில் இருந்து 24 ஆயிரம் திருடப்பட்டு உள்ளது. இதுகுறித்து அறிந்ததும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் தேன்மொழி என்பவர் தான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரிய. வந்துள்ளது. எனவே தேன்மொழியை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.





