--- --:--:-- --

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? பிரதமரின் முடிவை தமிழக அரசு ஏற்கும்..! தலைமைச் செயலாளர் சண்முகம் தகவல்!!

1

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர் மோடி நாடு தழுவிய அளவில் எடுக்கும் முடிவை தமிழகம் ஏற்கும் என தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக, அமைச்சரவைக் கூட்டம் முதல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று மாலை நடைபெற்றது துணை முதல்வர் த.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் இதில் பங்கேற்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எதிரொலியாக, ஊரடங்கு உத்தரவை வரும் 14-ந் தேதிக்கு பிறகும் தொடர்ந்து நீட்டிக்கப்படுவது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின்னர், தலைமைச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :

 

இன்று காலை அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதில் ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என தமிழக முதல்வர் கோரிக்கை வைத்தார்.மேலும் பிரதமருடனான ஆலோசனையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு கருத்துக்களும், ஆலோசனைகளும் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

இதைத் தொடர்ந்து, பிரதமருடனான ஆலோசனை தொடர்பாக தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஊரடங்கை ஒரு மாநிலம் மட்டும் அமல்படுத்தினால் பலனளிக்காது. ஊரடங்கு என்பது ஒரு மாநிலம் மட்டும் எடுக்கும் முடிவல்ல. நாடு தழுவிய அளவில் எடுக்கப்பட வேண்டிய முடிவு ஊரடங்கு தொடர்பாக இன்று இரவு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்த உள்ளார்.

 

எனவே ஊரடங்கு குறித்து நாடு தழுவிய அளவில் பிரதமர் மோடி அறிவிக்கும் முடிவை தமிழகம் ஏற்கும். பிரதமரின் அறிவிப்பு வெளியான பின் கொரோனா தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon