--- --:--:-- --

அழிந்து போகும் வகையில் CCTV செட்டிங்ஸ் செய்ததற்கான காரணம் என்ன?

3

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிசிடிவி பொறுப்பாளர் தாமஸ் பிரான்சிஸ் மற்றும் வாகன ஓட்டுனர் ஜெயசேகரன் ஆகியோரிடம் திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து நீதிபதி பாரதிதாசன் விசாரணை நடத்தினார்.

 

உயர்நீதிமன்ற கிளையில் நீதிபதி பாரதிதாசன் தாக்கல் செய்த அறிக்கையில் ஒரு டெராபைட் அளவுக்கு போதுமான ஸ்டோரேஜ் இருந்தும் தினமும் தானாகவே அழிந்து போகும் வகையில் சாத்தான்குளம் காவல் நிலைய சிசிடிவி காட்சிகளை பதிவாகும் ஹார்டு டிஸ்கில் செட்டிங் செய்யப்பட்டிருந்ததாக குறிப்பிட்டு இருந்தார்.

 

சம்பவம் நடந்த 19ஆம் தேதி முதல் பதிவான காட்சிகள் அழிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கணினி பிரிவில் சிசிடிவி பொறுப்பாளராக பணியாற்றி வந்த காவலர் தாமஸ் பிரான்சிசிடம் இதுகுறித்து நீதிபதி பாரதிதாசன் விசாரணை நடத்தினார்.

 

தொடர்ந்து சாத்தான்குளம் காவல் நிலைய ஓட்டுநர் ஜெயசேகரன் காவல் நிலையத்தில் தூய்மை பணியாளராக பணிபுரியும் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியான வேல்முருகன் ஆகியோரிடமும், நீதிபதி பாரதிதாசன் திருச்செங்கோடு அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து தொடர் விசாரணை மேற்கொண்டனர்.

Leave a Reply

Right Menu Icon