--- --:--:-- --

முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று IAS, IPS, IFS அதிகாரிகளின் உயர்மட்ட மாநாடு..!

01

முதலமைச்சர் விஜய் தலைமையில் IAS, IPS, IFS அதிகாரிகளின் உயர்மட்ட மாநாடு இன்று தொடங்குகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று நடைபெறும் மாநாட்டில், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். இதில், சட்டம் – ஒழுங்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, பொது சுகாதாரம், போதையில்லா தமிழ்நாடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.

 

அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர்களுடன் மட்டும் முதலமைச்சர் விஜய் தனியாக ஆலோசனை மேற்கொள்கிறார். இதில், 28 துறைகளின் செயல்திட்டங்கள் மற்றும் “வெற்றி தமிழகம்” தொலைநோக்கு ஆவணத்தின் அடிப்படையில் மாவட்டங்களில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்துகிறார்.

 

 

அதேபோல, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை தொடர்பான திட்டங்கள் குறித்து IFS அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். இதில், பசுமை தமிழ்நாடு திட்டம், வனப்பகுதிகளில் சாலை மேம்பாடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் முதல் IAS, IPS, IFS அதிகாரிகளின் மாநாடு என்பதால் இந்தக் கூட்டம் கவனம் பெற்றுள்ளது.

 

 

Leave a Reply

Right Menu Icon