கி. வீரமணியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் ரமேஷ்
திருச்சியிலிருந்து சென்னைக்கு ரயிலில் பயணம் மேற்கொண்டிருந்த போது, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியை, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் நேரில் சந்தித்துப் பேசினார். அமைச்சர் ரமேஷ் திருச்சியிலிருந்து சென்னை நோக்கி இரயில் பயணம் மேற்கொண்டிருந்த போது, அதே இரயிலில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பயணம் செய்துள்ளார்.
இந்த எதிர்பாராத சூழலில், அமைச்சர் ரமேஷ் கி. வீரமணியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் பரவலான கவனத்தைப் பெற்றுள்ள இந்த சந்திப்பு, முற்றிலும் எதிர்பாராத ஒரு நிகழ்வாக, ரயில் பயணத்தின் போதே சுமுகமான முறையில் நிகழ்ந்துள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.





