--- --:--:-- --

வேறு மாநிலத்தைச் சேர்ந்தவருக்கு டெல்லி சிறப்பு பிரதிநிதியா? – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்

9

மிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வேறு மாநிலத்தைச் சேர்ந்த வெங்கட நாராயணாவை நியமித்தது கண்டிக்கத்தக்கது” என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார். தேமுதிக பொதுச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பிரேமலதா விஜயகாந்த் இன்று விருத்தாசலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; “எனது தொகுதி மக்களை சந்தித்து அவர்களிடம் மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட அதிகாரியுடன் கலந்து ஆலோசித்து உரிய தீர்வு காணப்படும்.

 

 

மேலும் இங்கு மூன்று நாட்கள் நான் தங்கியிருந்து நாளை அரசு பள்ளிகளை ஆய்வு செய்ய போகிறேன். பிளே கிரவுண்ட், ஆடிட்டோரியம் மற்றும் விவசாய நிலங்களை பார்வையிட உள்ளேன். அதேபோல தொகுதியில் நிறைய பிரச்சனைகள் உள்ளன. அதனை நேராக சந்திக்க போகிறேன். நாளை அனைத்து அரசு அதிகாரிகளுடனான சந்திப்பை நடத்துகிறேன். அதில், பொதுமக்கள் கொடுத்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கொடுத்து ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல் வழங்க இருக்கிறேன்.

 

 

தமிழக அரசு சிறப்பு பிரதிநிதியாக டெல்லிக்கு கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த வெங்கட நாராயணா என்பவரை நியமிக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.
விவசாய கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என நான் கோரிக்கை வைத்திருக்கிறேன். அதேபோன்று விருத்தாசலம் தொகுதி மக்களின் பிரதான கோரிக்கையான சாலை வசதி, பேருந்து வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். கண்டிப்பாக அரசின் கவனத்திற்கு இதை கொண்டு செல்வேன்.

 

 

உறுதியாக தமிழ்நாடு முழுக்க அனைத்து விவசாயிகள் கடனையும் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கையாக இருக்கிறது. (எல் நினோ) வறட்சி மாநிலமாக மாறப் போகும் நிலை உள்ளதாக தகவல் இருக்கிறது. எல் நினோ வந்தால் தமிழ்நாடு வறட்சி மற்றும் பாலைவனமாக மாற வாய்ப்பு உள்ளது. ஆகையால் தான் மேகதாதில் அணை கட்டக்கூடாது. மழை நீரை சேமிக்க வேண்டும். நாம் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாற வேண்டும். விவசாயத்துக்கும் தண்ணீருக்கும் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon