--- --:--:-- --

இன்ஜினியரிங் கல்லூரிகள் ஆகஸ்ட் 16 இல் தொடங்கப்படும்..!

2

கொரொனா நோய்த்தொற்று காரணமாக தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கல்வி நிறுவனங்கள் கடந்த மார்ச் மாத இறுதியிலிருந்து மூடப்பட்டு கிடைக்கின்றன. அடுத்த கல்வியாண்டுக்கான காலமும் தொடங்கிவிட்ட நிலையில் இன்னும் கொரொனாவும் முடிந்தபாடில்லை, ஊரடங்கும் முடிந்தபாடில்லை.

 

எனவே கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என ஆசிரியர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில்தான் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளது. அதாவது நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் எப்போது வகுப்புகளை தொடங்கலாம் என்பது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளன.

 

அதில் பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கான அங்கீகாரத்தை ஜூலை 15-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று இன்ஜினியரிங் படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வு மாணவர் சேர்க்கை மற்றும் இடங்கள் ஒதுக்கீடு ஆகியவற்றை ஆகஸ்ட் 30ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

 

இரண்டாம் கட்ட கலந்தாய்வு மாணவர் சேர்க்கை மற்றும் இடங்கள் ஒதுக்கீடு என்பது செப்டம்பர் பத்தாம் தேதிக்குள் முடிக்க வேண்டும் மொத்தத்தில் காலியாக இருக்கும் இடங்களில் மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் முடித்துவிடவேண்டும்.

 

இன்ஜினியரிங் படிப்புகளில் உள்ள மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 16ஆம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக இந்தப் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் வகுப்புகள் ஆரம்பிக்கலாம்இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon