--- --:--:-- --

மத்திய அரசின் 125 நாள் வேலைத் திட்டம்: தமிழக அரசு உடனே முடிவெடுக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

4

காத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் (100 நாள் வேலைத் திட்டம்) மத்திய அரசு பல்வேறு மாற்றங்களைச் செய்து, வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் ‘125 நாள் வேலைத் திட்டமாக’ அமல்படுத்த உள்ளது. இத்திட்டத்தால் மாநில அரசுக்கு நிதிச்சுமை அதிகரிக்கும் என்பதால், தமிழக அரசு இதன் சாதக பாதகங்களை ஆராய்ந்து உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்றும், மாற்றுத் திட்டங்களைப் பரிசீலிக்க வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

 

இதுதொடர்பாக பா.ம.க டதலைவர் அன்புமணி ராமத வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த புதிய 125 நாள் வேலைத் திட்டத்தை செயல்படுத்தப் போவதாக 19 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் ஏற்கனவே அறிவிக்கை வெளியிட்டுள்ளன. அதே நேரத்தில், தெலங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இத்திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது குறித்து தீவிரமாகப் பரிசீலித்து வருகின்றன.

 

 

தமிழகத்திற்கு ரூ.5,305 கோடி கூடுதல் சுமை:புதிய மாற்றங்களின்படி, இத்திட்டத்தில் மாநில அரசுகளின் நிதிப் பங்களிப்பு 40 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மாநில அரசின் நிதிச்சுமை மேலும் பல மடங்கு கூடும். இத்திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.7,957.57 கோடி ஒதுக்கியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு தனது பங்காக ரூ.5,305.04 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்கினாலும் கூட, அதன் மூலம் வெறும் 39.69 நாட்களுக்கு மட்டுமே வேலை வழங்க முடியும் என்ற சூழல் நிலவுகிறது.

 

 

மாற்றுத் திட்டங்களை பரிசீலிக்க கோரிக்கை:எனவே, இத்திட்டத்தினால் ஏற்படும் சாதக பாதகங்கள் குறித்து தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக விவாதித்து ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். அத்துடன், கிராமப்புற மக்களுக்குத் தடையின்றி வேலைவாய்ப்பு வழங்குவதற்கான மாற்றுத் திட்டங்களையும் தமிழக அரசு உடனடியாகப் பரிசீலிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் எம்பி கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Leave a Reply

Right Menu Icon