--- --:--:-- --

திமுகவில் இருந்து பாஜகவுக்கு “தாவிய” வி.பி.துரைசாமிக்கு முக்கிய பதவி…மாநில துணைத் தலைவராக நியமனம்..நமீதாவுக்கும் பதவி!!

5f61f4bb-800d-4a14-bee5-1b7363bd88f0

திமுகவில் இருந்து பாஜகவுக்கு சமீபத்தில் கட்சி தாவிய முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி, மாநில பாஜக துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பாஜகவில் சமீபத்தில் இணைந்த கவர்ச்சி நடிகை நமீதாவுக்கும் பாஜகவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

முன்னாள் துணை சபாநாயகரான வி.பி.துரைசாமி, திமுகவில் முக்கியப் பொறுப்பும் வகித்து வந்தவர். சில மாதங்களுக்கு முன் 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 3 இடங்கள் திமுகவுக்கு உறுதியான நிலையில், சீனியரான தமக்கும் வாய்ப்பு கிடைக்கும் என வி.பி.துரைசாமி எதிர்பார்த்தார். ஆனால் அவரை புறக்கணித்து விட்டு, முன்னாள் அமைச்சரான அந்தியூர் செல்வராஜுக்கு ராஜ்யசபா எம்.பி.பதவி வழங்கினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் .


  •  “கட்சி மேலிடம் மீது அதிருப்தியில் இருந்த வி.பி.துரைசாமி, திடீரென பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகனை சந்தித்தார். இச்சந்திப்பு நடந்த மறுநாளே வி.பி.துரைசாமியின் கட்சிப் பொறுப்பையும் பறித்தது திமுக மேலிடம் .இதனையடுத்து வி.பி.துரைசாமி பாஜகவில் ஒரேயடியாக ஐக்கியமானார்”

இந்நிலையில் வி.பி.துரைசாமியை பாஜக மாநில துணை தலைவராக நியமித்துள்ளது பாஜக மேலிடம் .அத்துடன் மேலும் 3 பேரும் பாஜக மாநில துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், சக்ரவர்த்தி ஆகிய 3 பேரும் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் சமீபத்தில் பாஜகவில் இணைந்த கவர்ச்சி நடிகை நமீதாவுக்கு மாநில செயற்குழு உறுப்பினர் பதவியை வழங்கி அழகு பார்த்துள்ளது பாஜக மேலிடம் .

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon