--- --:--:-- --

காகிதத்தில் மின்னும் கனவுகளா? கணக்கிற்கான பட்ஜெட்டா?  தவெகவின் முதல் பட்ஜெட் சொல்வது என்ன?

ch

மிழக அரசியல் வரலாற்றில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில், முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக  அரசின் முதல் முழுமையான பட்ஜெட் (2026-27) இன்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் என்.மரிய வில்சனால் தாக்கல் செய்யப்பட்டது.

 
இரு திராவிட கட்சிகளின் நீண்ட கால ஆட்சிக்குப் பிறகு, ஒரு மாற்று சந்தோசம் அளிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த முதல் பட்ஜெட், பல்வேறு தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த பட்ஜெட் பொதுமக்கள், மாணவர்கள், மற்றும் பல்வேறு தரப்பினரிடையே எத்தகைய வரவேற்பைப் பெற்றுள்ளது. முந்தைய ஆட்சியின் பட்ஜெட்டோடு இது எவ்வாறு ஒப்பிடப்படுகிறது? என்பதை பாா்ப்போம்.

1. மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பம்சங்கள்:
 கல்வித்துறைக்கு இந்த பட்ஜெட்டில் மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

* கல்லூரி மாணவர்களுக்காக ‘வெற்றி மடிகணினி திட்டம்’ அறிவிக்கப்பட்டு ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹெல்மெட் மற்றும் தண்ணீர் பாட்டிலுடன் கூடிய விலையில்லா சைக்கிள்கள் வழங்க ரூ.277 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


* அரசுப் பள்ளிகளை நவீனப்படுத்த ரூ.2,132 கோடியும், பெருந்தலைவர் காமராஜர் பெயரில் நவீன மாதிரி உறைவிடப் பள்ளிகள் அமைக்க ரூ.125 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

*  தமிழகத்தில் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்துவது குறித்த அரசின் நிலைப்பாடு மீண்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2. பெண்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் வரப்பிரசாதங்கள்

*ஏழைப் பெண்களுக்குத் திருமணத்தின் போது 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் புதிய திட்டத்திற்கு ரூ.812 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும்  திட்டம் பொதுமக்களிடம் ஆச்சரியத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

3. கடன் சுமை மற்றும் வருவாய் ஈட்டுவதற்கான வழிவகைகள்

தமிழகத்தின் மிகப்பெரிய சவாலான கடன் சுமையை எதிர்கொள்ளும் விதமாக, அரசுத்துறைகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதாகவும், ஊழல் மற்றும் டெண்டர் முறைகளில் உள்ள கமிஷன் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2036-க்குள் தமிழகத்தை 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் தொழில் முதலீடுகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

4. முந்தைய ஆட்சிக்கும் தவெக தற்போதைய ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்? 

புதிய மாற்றத்தை மையமாகக் கொண்டு கவர்ச்சிகரமான மற்றும் அடையாள திட்டங்கள் ( தாய்மாமன் திட்டம், காமராஜர் பள்ளிகள்) 
நவீன டிஜிட்டல் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து லேப்டாப் மற்றும் பாதுகாப்புடன் கூடிய சைக்கிள் வழங்கல். நலத்திட்ட உதவிகள் மற்றும் மானியங்களுக்கு அதிக முக்கியத்துவம். நலத்திட்ட உதவிகள் மற்றும் மானியங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது.

மொத்தத்தில் அனைவராலும் வரவேற்கப்பட்டதா?

இந்த பட்ஜெட் புதிய அரசின் முதல் அடி என்பதால், மாணவர்களுக்கான நலத்திட்டங்கள், பெண்களுக்கான தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை திட்டம், பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாடு போன்ற அறிவிப்புகள் பரவலாக வரவேற்பை பெற்றுள்ளன. அதேசமயம், தேர்தல் காலத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சில மாதாந்திர உதவித்தொகை திட்டங்கள் குறித்த முழுமையான மற்றும் உடனடி அமலாக்க அறிவிப்புகள் குறித்து எதிர்கட்சிகளிடம் இருந்து விவாதங்களும் கேள்விகளும் எழுந்துள்ளன.

சுருக்கமாகச் சொன்னால், தேர்தல் வாக்குறுதிகளின் சில தாக்கங்களையும், தமிழக வெற்றிக் கழக அரசின் தனித்துவமான அடையாளத்தையும் பிரதிபலிக்கும் ஒரு சமநிலையான பட்ஜெட்டாக இது பார்க்கப்படுகிறது.
-சஷ்டி மு.கண்ணதாசன்
📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon