--- --:--:-- --

டாஸ்மாக் மதுபானத்தை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முறை இன்று அறிமுகம்!

01

ரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் டாஸ்மாக் மதுபான வகைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் நடைமுறை இன்று அமலுக்கு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஆன்லைனில் எவ்வாறு முன்பதிவு செய்வது என்பது குறித்த செயல் விளக்கத்தை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

 

 

இதனால், பல கடைகளில் மது வாங்க வந்தவர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பதைத் தடுக்கும் வகையில் புதிய நடைமுறையை தமிழ்நாடு அரசு கொண்டுவருகிறது. அதன்படி, மது வகைகளை முன்பதிவு செய்வதற்காக டாஸ்மாக் நிறுவனத்தின் சார்பில் ’https://tasmace2e.in/’ என்ற இணையதளத்தில் புதிய வசதி இன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

 

மது வாங்குவோர் இந்த இணையதளம் மூலம் தங்களுக்கு அருகிலுள்ள டாஸ்மாக் கடைகளில் என்னென்ன மது வகைகள் இருக்கின்றன, அவற்றின் விலை என்ன என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து முன்பதிவு செய்ய முடியும். மதுவாங்குவோர் தங்களுக்கு விருப்பமான மது பாட்டிலைத் தேர்வுசெய்து ‘Google Pay’ போன்ற ஆன்லைன் செயலிகள் மூலம் பணத்தைச் செலுத்தலாம் என்றும் பணம் செலுத்தியதும் அவர்களின் செல்போனுக்கு ஒரு ‘கியூஆர்’ குறியீடு அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதனை சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையில் காண்பிக்கும் போது, விற்பனையாளர் அதைச் சரிபார்த்து உடனடியாக மது பாட்டிலை வழங்கிவிடுவார் என்றும் ஆர்டரை அதே நாளில் எடுக்கத் தவறினால் கட்டணத் தொகையில் 10 ரூபாய் பிடித்தம் செய்துவிட்டு மீதித் தொகை திருப்பி வழங்கப்படும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுபானங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்வது குறித்த விளக்க வீடியோவை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

 

அதேநேரம், ஆன்லைனில் மது பானத்தை முன்பதிவு செய்வதை அனுமதிப்பது ஆபத்து என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நியாய விலைக் கடைகளில் உணவுப் பொருள்களை வாங்குவதற்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் மக்களின் வாட்டத்தைப் போக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, மது குடிப்பவர்களின் வசதிக்காக இத்தகைய திட்டங்களை செயல்படுத்துவது சமூகச் சீரழிவுக்கு தான் வகை செய்யும் என்று எச்சரித்துள்ளார்.
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.

 

டாஸ்மாக் கடைகளில் முன்பதிவு செய்து மதுபானங்களை பெறும் நடைமுறையை உடனடியாக கைவிட வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபானங்களுக்கு ரசீது வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.

 

 

அப்போது, மனுதாரர் குற்றம்சாட்டிய கடைகளில் 5 கடைகள் மூடப்பட்டதாகவும், மற்ற கடைகளின் விற்பனை பதிவேடு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகவும் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதி, டாஸ்மாக் கடைகளில் ரசீது புத்தகங்கள் பராமரிக்கப்படாததையும், நுகர்வோருக்கு ரசீதுகள் வழங்கப்படாததையும் சுட்டிக்காட்டி, நுகர்வோர் வாங்கும் ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரசீது கொடுக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளை வரை ஒத்திவைத்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon