முதலமைச்சர் விஜய் குறித்து புகழாரம் பாடிய அமைச்சர் வினோத்..!
விஜய் தலைமையிலான த.வெ.க அரசு வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தொடர முடிவு செய்துள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இந்நிலையில், வேளாண் துறைக்கான தனி பட்ஜெட், வியாழக்கிழமை சட்டசபையில் தாக்கலானது. காலை 9:30 மணிக்கு வேளாந்துறை அமைச்சர் வினோத், முதல் முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அப்போது பேசிய அமைச்சர் வினோத், ”மனநாயகத்தை தோற்கடித்த பாமரனின் ஜனநாயக முதல்வர் நீங்கள். திரைமன்றங்களில் மட்டும் அல்ல சட்டமன்றத்திலும் நாயகன் நீங்கள் தான். உயர்ந்த எண்ணங்களை விதையாக்கி, ஊழல் ஒவ்வொன்றையும் களை எழுத்து, சமத்துவம் எனும் செடி வளர்த்து, மக்களாட்சி எனும் பெரும் மரத்தை பிடித்து இருக்கும் கோட் சூட் அணிந்த விவசாயி நீங்கள்.
விசில் என்பது ஒலி அல்ல அது பாமரர்களின் மொழி. அதுவும் உலகின் பொது மொழி. காது கொடுத்து கேளுங்கள் விசில் தனியாக ஒலித்தாலும் கம்பீரம் குறையாது. அணியோடு சேரும் போது அகம்பாவம் இருக்காது. ஊரை எல்லாம் நாற்றமெடுத்த ஊழலை ஒழிக்க உங்களை விட்டால் ஒருவரும் இல்லை” என்று முதலமைச்சர் விஜய் குறித்து புகழாரம் பாடிக் கொண்டே சென்றார்.
அப்போது எதிர்க்கட்சிகள், சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரை நோக்கி வேளாண் பட்ஜெட்டை வாசிக்குமாறு வலியுறுத்தினர். இதையடுத்து, சபாநாயகர், ‘வேளாண் நிதிநிலை அறிக்கை’ என்று தாங்கள் சபை முன் வைத்திருக்கும் அந்த அறிக்கையை மட்டும் விரிவாக படிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன் என்று அமைச்சர் வினோத்தை வலியுறுத்தினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




