பள்ளிக்கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கீடு குறைப்பா? – அமைச்சர் ராஜ்மோகன் பதில்
வெற்றிக்கழக பட்ஜெட்டே பள்ளிக்கல்விக்கு உண்மையான நிதி உயர்வை தந்துள்ளது. 2025-26 திமுக பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.46,767 கோடி. இதில், இடைக்கால பட்ஜெட்டுக்கு முன்பு வரை செலவிடப்பட்ட தொகை 42,351 கோடி மட்டும் தான்.
திமுகவின் இடைக்கால பட்ஜெட்டில் பல ஊதிய வரம்புகளையும், செலவினங்களையும் மிகை மதிப்பீடு செய்துள்ளனர். திமுகவின் கடைசி பட்ஜெட்டான 2026-27 இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி என அதிகரிப்பு.
பட்ஜெட்டில் உண்மையாக செலவு செய்யப்பட்டதைவிட சுமார் ரூ. 6003 கோடி காரணமே இல்லாமல் உயர்த்தப்பட்டது. காரணமற்ற இந்த உயர்வுக்கு பின்னால் இருந்தது தவறான கணக்கீடுகளும், தேவையற்ற நிதி உயர்வுகளும் மட்டுமே. திமுக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு செலவிடப்பட்டதைவிட சுமார் ரூ.2176 கோடி கூடுதலாக ஒதுக்கீடு – அமைச்சர் ராஜ்மோகன் பதில்
📱 Share on WhatsApp 𝕏 Share on X




