--- --:--:-- --

மத்திய அமலாக்க துறை அதிகாரிகள் 19 பேருக்கு கொரோனா உறுதி…! விசாரணைக்கு சென்ற ஜெகத்ரட்சகன் எம்.பி.க்கும் பாதிப்பு..?

we6

சென்னையில் உள்ள மத்திய அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் 19 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இரு நாட்களுக்கு முன்பு இந்த அலுவலகத்தில், சட்ட விரோத பணப் பரிமாற்ற புகாரில் 6 மணி நேரம் விசாரிக்கப்பட்ட திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கும் தொற்று பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், அவரை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் கொரோ கா தொற்று பரவல் தற்போது முழு வீச்சில் உள்ளது. தலைநகர் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டியுள்ளது. மொத்த உயிரிழப்பும் நேற்று வரை 1321 ஆக பதிவாகியுள்ள நிலையில் இன்றும் உயிரிழப்பும், பாதிப்பும் வண்ணம் உள்ளது.

 

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு சாமான்யர்கள் முதல் டாக்டர்கள், செவிலியர்கள், காவல் துறையினர் அரசுத் துறை அதிகாரிகள், அரசியல் மாற்றும் திரையுலக புள்ளிகள் என பலரும் ஆளாகி வருகின்றனர். தமிழக எம்எல்ஏக்களில் மட்டும் 8 பேர் பாதிக்கப்பட்டு அதில் திமுகவைச் சேர்ந்த ஜெ.அன்பழகன் உயிரிழந்த சோகமும் நிகழ்ந்துள்ளது.

 

  • “உயிரிழப்பில் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், காவல்துறையினர், ஊடகத்துறையினர் என பல தரப்பினரும் பலியாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.சென்னையில், மதுராந்தகத்தைச் சேர்ந்த அரசு டாக்டர் ஒருவரும் இன்று உயிரிழந்துள்ளார்”

 

இந்நிலையில் சென்னையில் உள்ள மத்திய அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் 19 அதிகாரி களுக்கு ஒட்டுமொத்தமாக கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அலுவலத்தில் வைத்துத்தான் அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி.யான எஸ்.ஜெகத்ரட்சகனிடம் 6 மணி நேரம் விசாரணை நடந்தது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்க துறை அதிகாரிகள் ஜெகத்ரட்சகனிடம் விசாரணை நடத்தினர்.

 

தற்போது விசாரணை நடத்திய அதிகாரிகள் உள்பட அமலாக்க அலுவலகத்தில் பணிபுரியும் 19 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ஜெகத்ரட்சகன் எம்.பி.க்கும் தொற்று பாதித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் ஜெகத்ரட்சகனை உடனடியாக தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், அவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon