விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஜூலை 1 ஆம் தேதி தொடக்கம்..!
விக்ரம் நடிக்கும் அறுபதாவது திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் 1ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படுகிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் அவரின் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று முடிந்த கொரொனா தொடக்கம் காரணமாக இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
தற்போது தமிழ்நாடு அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் 3ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இதற்கான அனைத்து வேலைகளையும் படக்குழுவினர் முடித்து விட்டனர்.






