--- --:--:-- --

அமைச்சர் துரைக்கண்ணு உடல் நிலை மிகவும் கவலைக்கிடம்..! எந்த முன்னேற்றமும் இல்லை என மருத்துவமனை அறிக்கை!!

11

மிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இன்று தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

கடந்த 13-ந் தேதி மூச்சுத் திணறல் காரணமாக விழுப்புரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் துரைக்கண்ணு, பின்னர் மேல் சிகிச்சைக்கை சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் பாதிப்புடன் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதும் உறுதியானது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாகவே அவருடைய உடல் நிலை மோசமாகி பின்னைவு ஏற்பட்டது. அவரது உடல் நிலை மோசமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பிலும் அறிக்கை வெளியானது.

 

இதனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பலரும் காவேரி மருத்துவமனை சென்று அவரது உடல் நிலை குறித்து கேட்டறிந்தனர். இந்நிலையில், இன்று அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் அவரின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும், மிகவும் பின்னடைவாக உள்ளதாகவும்,
அதிகப்படியான உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவேரி மருத்துவமனை தரப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Right Menu Icon