சினிமா பாணியில் தாலி கட்டும் போது திருமணத்தை நிறுத்திய மணமகள்..!
நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன திருமணம் ஒன்றில் தாலி கட்டும் நேரத்தில் மணமகள் திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார். மட்டகண்டி கிராமத்தை சேர்ந்த ஆனந்துக்கும், தூநேரியை சேர்ந்த பிரியதர்ஷினிக்கும் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மணமக்கள் மண கோலத்தில் மேடையில் உட்கார்ந்து இருந்துள்ளனர். படுகர் இன மரபு படி மணமேடையில் மணப்பெண் மூன்று முறை சம்மதம் தெரிவித்த பின்பே தாலி கட்ட வேண்டும். அதன்படி சம்மதம் கேட்டபோது மௌனம் காத்த பிரியதர்ஷினி மூன்றாவது முறை கேட்கையில் சம்மதம் இல்லை எனக்கூறி ஆனந்தின் கைகளை தடுத்தார்.
தான் விரும்பும் ஒருவர் ஒரு மணி நேரத்தில் வந்துவிடுவார் என கூறியவாறு எழுந்து அங்கிருந்து செல்ல முற்பட்டார். இதை மறுத்த பிரியதர்ஷினியின் உறவினர்கள் அவரை தாக்க முற்பட்டனர்.
இது ஒருபுறம் நடக்க மாப்பிள்ளை கோலத்தில் இருந்த ஆனந்த் என்ன செய்வதென்று தெரியாமல் சங்கடத்தில் தவித்துள்ளார்.






