சிறந்த நிர்வாகம் கொண்ட பெரிய மாநிலங்களில் தமிழகம் முதலிடம்..!
சிறந்த நிர்வாகம் கொண்ட பெரிய மாநிலங்களில் கேரளா முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் இருப்பதாக பெங்களூருவை சேர்ந்த ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
நிலையான வளர்ச்சியின் அடிப்படையில் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் தலைவராக இருக்கும் இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தெரிவித்துள்ளார்.
ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இந்த பட்டியலில் மூன்றாவது நான்காவது இடத்திலும் உத்திரப்பிரதேசம், பீகார், ஒடிசா மாநிலங்கள் கடைசி இடத்திலும் உள்ளனர். சிறிய மாநிலங்களில் கோவா முதலிடத்திலும், மேகாலயா, இமாச்சல பிரதேச மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.







