--- --:--:-- --

பெண்களை அரைநிர்வாணமாக நின்று திட்டிய காவலர்..!

9

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனிப்பிரிவு காவலர் ஒருவர் அரைகுறை ஆடையுடன் பெண்களை திட்டும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி காவல் நிலையதனிப்பிரிவு போலீசார் ஆகப் பணி புரிபவர் கலையரசன்.

 

கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் காவல்துறையில் பணியாற்றி வரும் இவர் வல்லுவர்புரம் கிராமத்தில் வசித்து வருகிறார். கலையரசனுக்கும் அவரது உறவினர்களுக்கும் இடையே தனிப்பட்ட பகை இருந்து வந்துள்ளது. அந்த கோபத்தில் தன் வீட்டின் வழியாக மக்கள் பயன்படுத்தி வரும் பொது வழியை செங்கற்கள் கொண்டு அடைந்துள்ளார்.

 

இதனால் அந்த தெருவை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காவலரின் அராஜகத்தை அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் கோபமடைந்த காவலர் தான் ஒரு காவலர் என்பதையே மறந்து போன நிலையில் அரை நிர்வாணமாக வீட்டை விட்டு வெளியே வந்து பெண்களை திட்டியுள்ளார்.

 

மரியாதை குறைவாக பேசியதோடு பெண்களை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். போலீஸ்காரர் மிரட்டல் விடுத்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்த சிலர் அதை சமூக வலைதளத்திலும் பதிவு செய்ய வேகமாக பரவி வருகிறது.

 

தங்களை ஆபாசமாக பேசிய காவலர்களை கைது செய்யக் கோரி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon