--- --:--:-- --

தங்கம் விலையில் தடாலடி மாற்றம்..!

01

ஜூலை மாத தொடக்கத்திலேயே அதிரடியாக சரிந்த தங்கம் விலை பிறகு சற்று ஏற்ற இறக்கமாக இருந்தது. அதனை தொடர்ந்து கடந்த வாரத்தில் தங்கம் விலை காலை மாலை என 2 முறை மாற்றம் செய்..யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தொடர் சரிவை கண்டது. அந்த வகையில் நேற்று முன் தினம் 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,135க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,080க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

தொடர்ந்து நேற்றும் தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,150க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,200க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று ( ஜூலை 21) தங்கம் விலை மீண்டும் கணிசமாக அதிகரித்துள்ளது. அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,220க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,035க்கும் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.88,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 240க்கும், ஒரு கிலோ ரூ.2,40,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon