--- --:--:-- --

ரஷ்ய தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம்…!

8.1

ஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரொனா தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிக்கவும், தயாரிக்கவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் ரஷ்ய அரசின் முதலீட்டு நிறுவனமும் இந்தியாவை சேர்ந்த பிரபல சர்வதேச மருந்து நிறுவனமான டாக்டர் எடிஸும் கையெழுத்திட்டுள்ளன.

 

இந்த ஒப்பந்தத்தின்படி ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 தடுப்பூசியை 10 கோடி எண்ணிக்கையில் நாட்டு நிறுவனம் டாக்டர் எட்டிஸ் நிறுவனத்திற்கு அளிக்கும்.இந்த ஆண்டு இறுதியில் இந்த தடுப்பூசிகளை இந்திய நிறுவனத்திற்கு வழங்கும் பணி தொடங்கும் என்றும் ரஷ்ய முதலீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

ஸ்புட்னிக் தடுப்பூசியை மக்களுக்கு போடும் பணி தொடங்கி விட்டதாக சில நாட்களுக்கு முன்பாக ரஷ்யா தெரிவித்திருந்தது. முன்னதாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசியை இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரிக்க புனேவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon