டிராமா செய்கிறார் தி.மு.க எம்.எல்.ஏ – நிர்மல் குமார் விமர்சனம்
தி.மு.க எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் காரில் ஏறி மயக்கம் வருவதாக கூறி டிராமா செய்வதாக மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் குற்றம் சாட்டினார். மு.க. ஸ்டாலின் முதல்வராக இருந்தபோது த.வெ.கவினர் யாரும் கொலை மிரட்டல் விடுக்கவில்லை என்றும், ஆனால், விஜய்க்கு தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக குற்றம் சாட்டினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியார்களுடன் பேசிய அவர், ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் பொதுவெளி மேடையில் பேசும்போது முதலமைச்சரை அவதூறாகப் பேசுவதும், கொலை மிரட்டல் விடுக்கும் அளவிற்குப் பேசுவதும் சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு வழி வகுக்கும். முதலமைச்சரின் கையை உடைப்பேன் என விளாத்திகுளம் எம்.எல்.ஏ. பேசியிருக்கிறார்.
இதனால்தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த தி.மு.க ஆட்சியில் அரசுக்கு எதிராக சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபர்கள் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 70 வயது பாட்டியை பிடிக்க ஐந்து தனிப்படை அமைத்ததுதான் கடந்த கால தி.மு.க ஆட்சி என்றார்.






