--- --:--:-- --

சூரரை போற்று திரைப்படத்துக்கு தடையா? காரணம் என்ன?

10

சூரரை போற்று திரைப்படத்துக்கு தடை கோரியவழக்கில்காவல்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று படத்தில் மண்ணுருண்ட மேல மனுச பேயாட்டம் எனும் பாடல் இடம்பெற்றுள்ளது.

 

இந்த பாடலில் கீழ்சாதி உடம்புக்குள்ள ஓடறது சாக்கடையா அந்த மேல் சாதிக்காரர்களுக்கு இரண்டு கொம்பு உண்டா என்ற வரிகள் அனைத்து சாதியினரும் அமைதியாக வாழும் தமிழகத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதால் படத்துக்கு தடை விதிக்கக் கோரி தர்மபுரியை சேர்ந்த கார்த்திக் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

 

இதன் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் மனுதாரர் மீது புகார் மனு அளிக்க அறிவுறுத்திய நீதிபதி இளஞ்செழியன் புகார் மீது சட்டப்படி பரிசோதித்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon