பொய் செய்தி வெளியிட்டால் சட்ட நடவடிக்கை: இ.பி.எஸ் எச்சரிக்கை
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட வாரியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், உட்கட்சி விவகாரங்கள் குறித்து தொடர்ந்து உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியாகி வருவதை கழகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
குறிப்பாக, இன்றைய தினம் ‘தனியார் தொலைக்காட்சி’ செய்தி சேனல் வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது போல, மதுரை மாநகர் மாவட்டத்தில் ‘கந்தன்’ என்ற பெயரில் எந்தவொரு பகுதிச் செயலாளரும் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ள அ.தி.மு.க தலைமை, இத்தகைய பொய் செய்தியை வன்மையாக மறுப்பதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், செய்திகளை வெளியிடும் முன் உண்மைத்தன்மையை கேட்டறிந்து, ஊடகங்கள் தங்களின் அறம் தவறாமல் செயல்பட வேண்டும் என்றும், தொடர்ந்து இது போன்ற அவதூறு செய்திகளை வெளியிட்டால் கழகத்தின் சார்பில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.






