--- --:--:-- --

விஜய் சார் சீக்கிரம் வாங்க – குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக மக்கள் சாலை மறியல்

02

குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக குற்றம்சாட்டி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறிய மக்கள், உடனடியாக பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும், “விஜய் சார் சீக்கிரம் வாங்க” என்று முழக்கமிட்டு தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.

 

 

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுவதுடன், வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Leave a Reply

Right Menu Icon