தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவன்..!
தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மது மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்த நிலையில் மனைவியின் தலையில் கல்லை போட்டுகல்லை போட்டு கொலை செய்தார்.
இதுகுறித்து வழக்கை விசாரித்த கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனையடுத்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அதில் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் யாரும் இல்லை எனவும் சந்தர்ப்ப சாட்சியங்கள் அடிப்படையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். நீதிபதிகள் பிரகாஷ் அமர்வு மது தரப்பு வாதத்தை ஏற்க மறுத்து விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடிசெய்து உத்தரவிட்டது.





