--- --:--:-- --

போலி கால் சென்டர் நடத்தி மோசடி செய்த கும்பல்..!

6

சென்னையில் போலி கால் சென்டர் நடத்தி பொதுமக்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை காவல்துறையினர் கூண்டோடு கைது செய்துள்ளனர். தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி தருவதாக தொலைபேசியில் பேசி அவர்கள் தன்னிடம் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 500 ரூபாயை பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாக செல்வராஜ் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

 

இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் அம்பத்தூர் அருகே திருமுல்லைவாயிலில் அடுக்குமாடி கட்டடத்தில் போலியாக கால் சென்டர் நடத்தப்படுவதை கண்டுபிடித்தனர்.

 

6 தனிப்படை போலீசார் அங்கு சென்று அதிரடி ரெய்டு நடத்தி கால் சென்டரை நடத்தி வந்த சென்னை அய்யப்பன்தாங்கல் சேர்ந்த கோபிகிருஷ்ணன், செனாய் நகர் வளர்மதி அவரது கணவர் உள்ளிட்ட 12 பேரை கைது செய்தனர்.

Leave a Reply

Right Menu Icon