--- --:--:-- --

ஜனவரி 15ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்..!

10.2

மிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் ஜனவரி 15ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்தில் தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதம் முடிவடைய உள்ளதால் அதற்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் வரும் நவம்பர் 16-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

டிசம்பர் 15ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை ஆன்லைனில் மேற்கொள்ளலாம் என்றும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியுடன் 18 வயது பூர்த்தி அடைபவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அனைத்து பணிகளும் முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் ஜனவரி 15-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon