--- --:--:-- --

சீனாவில் தனது 38வது பிறந்தநாளை கொண்டாடும் பாண்டா..!

11

சீனாவில் உலகிலேயே அதிக வயதுடைய பாண்டா 38வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. தென்மேற்கு சீனாவின் சாங்குவிங் நகராட்சியில் உள்ள பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் ஜிங்சிங் எனும் பெயர்கொண்ட பாண்டா கரடி தான் உலகிலேயே அதிக வயதுடைய பாண்டாவாகும்.

 

1982 ஆம் ஆண்டு பிறந்த ஜிங்சிங் பாண்டாவின் 38வது பிறந்த நாளையொட்டி அதற்க்கு விருப்பமான உணவுகளை கொண்டு உருவாக்கப்பட்ட கேக்கை பூங்கா ஊழியர்கள் பரிசாக அளித்தனர்.

 

ஜின்ஸிங் பாண்டாவின் சந்ததியில் வந்த 153 பாண்டா கரடிகள் அமெரிக்கா கனடா ஜப்பான் விட பல்வேறு நாடுகளில் பராமரிக்கப்படுகின்றன. இதுவரை 30 வயதிற்கு மேல் 30 நாட்கள் மட்டுமே உயிர் வாழ்ந்து இருக்கும். ஜிங்சிங் தனது 38வது பிறந்த நாளிலும் நல்ல உடல் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon