பள்ளி வேனை ஆப் செய்யாமலேயே சென்ற ஓட்டுனர்.. கியரில் கை வைத்த குழந்தைகள்.. அடுத்த நிகழ்ந்த ஆபத்து..!
கடலூர் மாவட்டம் பித்தா குப்பத்தில் நிறுத்தப்பட்டிருந்த பள்ளி மாணவிகள், மாணவர்கள் கியரில் கை வைத்ததால் பின்னோக்கி நகர்ந்து வாய்க்காலில் விழுந்ததில் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர்.
ஆலபாக்கத்தில் இருந்து பித்தா குப்பம் கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தபோது வேனை நிறுத்திவிட்டு இன்ஜினை ஆஃப் செய்யாமல் ஓட்டுநர் கீழே இறங்கி செல்போனை பேசிக் கொண்டிருந்த நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
மாணவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





