நடுவழியில் நின்ற அரசு பேருந்தை தள்ளிய மாணவிகள்..!
நாகர்கோவிலில் நடுவழியில் பழுதான அரசு பேருந்துகளை மாணவிகள் தள்ளிவிட்ட வீடியோ வெளியான நிலையில் ஓட்டுநர் உட்பட நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து மணக்குடிக்குப் புறப்பட்ட அரசு பேருந்து கேப் ரோட்டில் பழுதாகி நின்றது. தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்ய வைத்தனர்.
இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் பேருந்தை முறையாக பராமரிக்காதது எலக்ட்ரீசியன் மேற்பார்வையாளர் மீது போக்குவரத்து கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.






