திடீர்னு கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி..!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கண்டைனர் லாரி சாலை தடுப்பில் மோதி விபத்தில் சிக்கியது. சென்னையில் இருந்து ஓசூர் நோக்கி சென்று கண்டைனர் தாறுமாறாக சர்வீஸ் சாலையில் நின்றது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் உடனடியாக அங்கிருந்து லாரியுடன் தப்பிய நிலையில் ஆம்பூர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி உள்ளது.





