அக்காவை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்று நாடகமாடிய தம்பி..!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பணம் மற்றும் நகைக்காக அக்காவை கொன்று நாடகமாடிய தம்பி கைது செய்யப்பட்டார். அமலாக்கத்தை சேர்ந்த செல்லம்மாள் என்பவர் கடந்த 2ஆம் தேதி அவரது வீட்டில் தலையில் காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுதொடர்பாக தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடலை எடுத்து பிரேத பரிசோதனை செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் சந்தேகத்தின் பேரில் அவரது தந்தை சுப்பிரமணியை பிடித்து விசாரித்தனர்.
அப்போது நகை மற்றும் நிலம் தொடர்பாக அக்காளிடம் அடிக்கடி தகராறு ஏற்பட்ட சம்பவத்தன்று ஆத்திரத்தில் இரும்பு கம்பியால் தலையில் அடித்து கொலை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து சுப்பிரமணியனை போலீசார் கைது செய்தனர்.






