பார் உரிமையாளரிடம் தலைமை காவலர் மாமூல் கேட்ட ஆடியோ..!
சென்னையில் பார் உரிமையாளரிடம் தலைமை காவலர்கள் கேட்கும் ஆடியோ வெளியான நிலையில் சம்பந்தப்பட்ட காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புளியந்தோப்பு சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள பார் உரிமையாளரிடம் செம்பியம் காவல் நிலைய தலைமை காவலர் ஜெயகாந்தன் என்பவர் மாமூல் கேட்டு உள்ளார்.
செல்போன் கேட்டேன் நீங்கள் வாங்கித் தரவில்லை என்று புலம்ப தொடங்குகிறது ஆடியோ. தொடர்ந்து தற்போது புதிதாக வந்துள்ள பெண் ஆய்வாளரும் பணம் கேட்கிறார். எனவே வழக்கமாக கொடுக்கும் 24 ஆயிரம் ரூபாயை கொடுத்து விடுங்கள் என நீள்கிறது அந்த ஆடியோ.
இந்த ஆடியோ இணையத்தில் வைரல் ஆன நிலையில் தலைமை காவலர் ஜெயகாந்தன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.






