ஆசிரியர் தினம் : வாழ்த்து செய்தியை வெளியிட்ட தமிழக முதல்வர், துணை முதல்வர், ஆளுநர்..!
ஆசிரியர் தினத்தையொட்டி ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டு இருக்கும் வாழ்த்து செய்தியில் நல்ல ஆசிரியர்களால் சிறந்த ஒழுக்கம் மற்றும் அறிவாற்றல் பெற்ற மனிதர்களை உருவாக்கி தர முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் முன்னேற்றத்தில் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் பாராட்டியுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு இருக்கும் வாழ்த்து செய்தியில் வளமிக்க அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் அரும்பணிகளில் ஈடுபடுபவர்கள் ஆசிரியர்கள் என புகழாரம் சூட்டியுள்ளார்.
நாட்டின் வருங்கால தூண்கள் ஆன மாணவ செல்வங்களுக்கு கல்வி செல்வத்தை அளிப்பதோடு ஒழுக்கம், பண்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகிய நெறிகளையும் போதிப்பவர்கள் ஆசிரியர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அறிவு மிக்க சமுதாயத்தை உருவாக்க அரும் பாடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து
துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வீடியோ வெளியிட்டுள்ளார்.






