வெளி மாவட்டங்களுக்கு செல்ல அரசு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடக்கம்..!
அரசு பேருந்துகளில் வெளிமாவட்டங்களுக்கு செல்ல முன்பதிவு தொடங்கியுள்ளது. செப்டம்பர் ஏழாம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையையும் பேருந்துகள் இயக்கப்படுவதால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து மாதங்களுக்கு பிறகு வெளியூர் செல்ல தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் கூட்டமும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் கட்டமாக 400 பேருந்துகள் இயக்கப்பட திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது.






