--- --:--:-- --

தமிழக அரசின் பொது பாடத்திட்டம்.. ஆளுநரின் கடிதத்தால் புதிய சர்ச்சை..!

3

மிழக அரசின் உயர்கல்வி கவுன்சில் வகுத்துள்ள பொது பாடத்திட்டத்தை பின்பற்ற தேவையில்லை என பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கலை அறிவியல் கல்லூரிகளுக்கு தமிழக ஆளுநர் ரவி கடிதம் எழுதியுள்ளார்.

 

பல்கலைக்கழகத் துணை வீரர்களும் தன்னாட்சி கல்லூரி முதல்வர்களும் தமிழக உயர்கல்வி கவுன்சில் வகுத்துள்ள பொது பாடத்திட்டம் குறித்து கவலை தெரிவித்ததாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

 

புதிதாக பரிந்துரைக்கப்பட்ட பொது பாடத்திட்டம் தற்போது பின்பற்றப்படும் பாடத்திட்டத்தை விட பின்தங்கி தரமற்று இருப்பதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்ததாக கூறியுள்ளார். இந்த புதிய பாடத்திட்டம் தேசிய அளவிலான தர நிர்ணயத்திலிருந்து வெளியேற்றிவிடும் எனவும் அவர்கள் கருத்து தெரிவிப்பதாக கூறினார்.

 

உயர் கல்வியின் தரத்தை நிர்ணயம் செய்வது மத்திய அரசின் அதிகார வரம்பிற்குள் இருப்பதை கருத்தில் கொண்டு பல்கலைக்கழக மானியக் குழுவிடம் இது தொடர்பாக கேட்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

 

Right Menu Icon