தென்னாப்பிரிக்கா புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி..!
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி தென்னாப்பிரிக்கா புறப்பட்டார். பிரிக்ஸ் மாநாட்டின் பொழுது சீன அதிபரை சந்திப்பது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பின் 15 வது முக்கிய மாநாடு தென்னாப்பிரிக்காவில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடியும் சீனா அதிபர் தனிமையில் சந்தித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பிரதமரின் சந்திப்பு நிகழ்வுகள் குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.





