மாநிலங்களவை எம்பியாக பதவியேற்றார் மத்திய அமைச்சர் ஜெயசங்கர்..!
மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட 9 எம்பிக்கள் பதவி ஏற்று கொண்டனர். புதிய மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு மாநிலங்களவை தலைவர் ஜெகதீஸ் டாக்டர் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
குஜராத்திலிருந்து பாரதிய ஜனதா சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இரண்டாவது முறை தேர்வாகிய ஜெய்சங்கர் ஆங்கிலத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். அவரிடம் குஜராத் மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து தேர்வான மூன்று பேரும் பதவியேற்று கொண்டனர்.





