உதவுவது போல் நடித்து குஜராத் பெண்ணை பலாத்காரம் செய்த மாணவர்கள்..!
மதுரையில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த குஜராத் மாணவியை உணவில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கல்லூரி மாணவர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சாட்டட் அக்கவுண்டன்ட் படித்தவரும் அகமதாபாத்தை சேர்ந்த மாணவி 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 17 மற்றும் 18ஆம் தேதிகளை நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த பொழுது தெப்பக்குளம் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியுள்ளார்.
கருத்தரங்கிற்காக வந்து விடுதியில் தங்கி இருந்துள்ளார். அப்போது சென்னையை சேர்ந்த அசிஸ், காஞ்சிபுரத்தை சேர்ந்த ஜெரோம், கதிரவன் ஆகியோர் மாணவிக்கு அறிமுகமாகியுள்ளனர்.
உடல்நல குறைவு ஏற்பட்டதை அடுத்து அவருக்கு மருந்தும் உணவும் வாங்கிக் கொடுத்த நிலையில் உணவை உட்கொண்ட சிறிது நேரத்தில் மயக்கமடைந்ததாக கூறப்படும் நிலையில் மாணவியை இருவரும் தனித்தனியே பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது.
புகார் அளித்த நிலையில் மதுரையில் புகார் அளிக்க அவர்கள் கூறியுள்ளனர். ஆன்லைன் மூலமாக மதுரை மாநகர காவல் ஆணையருக்கு மாணவி புகார் அளித்ததை எடுத்து உதவியாளர் காமாட்சி மாணவியிடம் whatsapp வீடியோவில் நடத்திய விசாரணையின் மூலம் புகார் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





