பிக் பாஸ் நிகழ்ச்சியில் சொல்லப்படும் நல்ல கருத்துக்கள் சிலருக்கு பிடிக்கவில்லை..!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சொல்லப்படும் நல்ல கருத்துக்கள் சிலருக்கு பிடிக்கவில்லை என மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கமல்ஹாசன் இரண்டாவது கட்ட பரப்புரையை தொடங்கியுள்ளார்.
அவர் முதற்கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரப்புரையை தொடங்கினார். சென்னையை அடுத்த போரூர் பூந்தமல்லி ஆகிய இடங்களில் திறந்தவெளி வாகனத்தில் பரப்புரையை மேற்கொண்டபோது பேசிய அவர் நல்லதே நினைக்கும் அனைவரும் எம்ஜிஆரின் வாரிசுதான் என்றும் தாம் எம்ஜிஆரின் நீட்சி என்றும் மீண்டும் குறிப்பிட்டார்.
2500 ரூபாய் கொடுத்தும் கூடாத கூட்டம் அன்புக்காக கூடி இருப்பதைக் கண்டு அவர்கள் அச்சம் கொள்வதாக தெரிவித்தார். எம்ஜிஆரின் படத்தை ஸ்டாம்ப் அளவில் ஒட்டியவர்கள் தற்போது அவரை சொந்தம் கொண்டாடுவதாக விமர்சித்தார்.
அதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரத்தில் பேசிய கமல்ஹாசன் பிக்பாஸ் நடத்துவதில் என்ன தவறு இருக்கிறது என கேள்வி எழுப்பினார்.






