இந்தோ திபெத் பாதுகாப்பு படை வீரர்கள் பயிற்சி நிறைவு விழா!
சிவங்கை அருகே உள்ள இலுப்பைகுடியில் இந்திய திபெத் பாதுகாப்பு படை வீரர்கள் பயிற்சி மையம் அமைந்துள்ளது. இங்கு கடந்த ஆறு மாத காலமாக கடுமையான பயிற்சி பெற்று அதனை வெற்றிகரமாக நிறைவு செய்த 7 பெண்கள் உட்பட 22 வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பு இன்று நடைபெற்றது.
வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட டிஐஜி ரன்வீர் சிங் முன்னிலையில் தங்கள் இன் உயிரை கொடுத்தாவது இந்திய திருநாட்டை காப்போம் என உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
தங்களை தாய் திருநாட்டிற்கு அர்ப்பணித்துக்கொண்ட சிறந்த வீரர்களுக்கும், சிறப்பாக பயிற்சி அளித்த பயிற்றுனர்களுக்கும் டிஐஜி ரன்வீர் சிங் கோப்பையை வழங்கி, பாதுகாப்பு பணிக்குச் செல்லும் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.






