புனித பயணம் செய்ய அரசு வழங்கும் நிதி உயர்வு..!
ஜெருசலேம் புனித பயணம் செய்ய அரசு வழங்கும் நிதி 37 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட திமுகவினர் மற்றும் கிறிஸ்தவ பேராயர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி ஜெருசலேம் புனித பயணம் செல்ல அரசு வழங்கும் நிதி 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 37 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தரப்படும் என தெரிவித்தார்.
சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக அதிமுக அரசு இருக்கும் எனவும் அவர் கூறினார். கூட்டணி வேறு, கொள்கை வேறு என்று கூறிய முதலமைச்சர் பழனிசாமி கொள்கைப்படி தான் அதிமுக செயல்படும் என தெரிவித்தார்.






