கடற்கரையில் கரை ஒதுங்கிய கடற்பசு..!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கடற்கரையில் கடற்பசு ஒன்று கரை ஒதுங்கியது. அய்யா வைகுண்டர் கோவில் அருகே கரை ஒதுங்கிய பசுவின் உடலில் பல காயங்கள் காணப்பட்டன. உடனடியாக வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி புதைத்தனர்.
அரியவகை உயிரினங்களான கடற்பசுவை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.





